சிஏஏ., பாகிஸ்தான் ஆதரவு; வெள்ளையனின் வஞ்சகத்தால் இந்து முன்னணியில் இணைந்த வியாபாரிகள்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல் வணிகம்
caa anti traders joined hm - 2026

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனை எதிர்த்து அதன் முக்கிய நிர்வாகிகள் அதில் இருந்து விலகி, இந்து முன்னணியில் இனணந்தனர்!

சிஏஏ.,வை எதிர்த்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெள்ளையன் பேசி வருவதால், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் வெள்ளையன் பிரிவிலிருந்து விலகி மதுரை மாநகர நிர்வாகிகள் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முன்னிலையில் இந்துமுன்னணியில் இணைந்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான கருத்தினை மக்களிடம் கூறி அவர்களையும் குழப்பி பாகிஸ்தானுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனை எதிர்த்து. மதுரை மாநகர முக்கிய நிர்வாகிகள் பலர் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் முன்னிலையில் தங்களை இனணத்துக் கொண்டனர்.

பின்னர் பேசிய நிர்வாகிகள், இந்தியாவில் வாழ்ந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் வெள்ளையனுக்கு எங்கள் எதிர்ப்பை காட்டவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றனர்.

வெள்ளையனை எதிர்த்து, வெள்ளையனின் நடவடிக்கை பிடிக்காமல் தாங்கள் அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அவர்கள் கூறியிருப்பது வியாபாரிகள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போல் மேலும் பல ஊர்களிலும் நகர்களிலும் வெள்ளையனின் அமைப்பில் இருந்து வர்த்தகர்கள் விலகி வெளியேறுவார்கள் என்று அவர்கள் கூறியதால், வர்த்தகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.