ஐயோ பாவம்… மகளின் இறுதிச் சடங்கை வீடியோ அழைப்பில் பார்த்து கதறிய தந்தை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
last rites of daughter - 2026

தினமும் வீடியோகால் மூலம் தன் மகளுடன் பேசிவரும் அந்த தந்தை அதே வீடியோ கால் மூலம் அவளுடைய இறுதிச் சடங்கையும் பார்த்து அழுது கதறினார்.

இந்த சோக சம்பவம் தெலங்காணா, ஜகித்யால மாவட்டத்தில் நடந்தது. எந்த ஒரு தந்தைக்கும் மகள் என்றால் உயிர்தான். அவளுக்கு சிறு காயம் ஏற்பட்டாலும் பொறுக்கமாட்டார். அப்படிப்பட்டது தன் அன்புப் பெண் இறந்து போனால்… அதுவும் வெளிநாட்டில் இருந்து கொண்டு மகளை கடைசியாக பார்க்கக் கூட இயலாவிட்டால்… அந்த தந்தையின் இதயம் எத்தனை பாடுபடும்?

வீடியோகால் மூலம் தினமும் பேசிவரும் தன் மகளை அதே வீடியோகால் மூலம் மயானத்திற்கு அனுப்பி வைக்க வேண்டி வந்தால் அந்த தந்தை படும் வேதனையை என்னவென்று சொல்வது?

ஜெகித்யால மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அனுபவித்த நரகவேதனை இது. ஜகித்தியால மாவட்டம் பீர்பூர் மண்டலம் தூங்கூரு கிராமத்தை சேர்ந்த பாலாஜி பாஸ்கர், தன் மனைவி சுனிதாவையும் மகள் சாகித்யா (12) வையும் சொந்த ஊரிலேயே இருத்தி, வேலைவாய்ப்பு தேடி ஐந்து மாதங்களுக்கு முன்பு துபாய் சென்றார்.

சாகித்யா கடந்த சில நாட்களாக டயாபடீஸ் நோயால் துன்பப்பட்டு வந்தாள். அவளுக்கு டிரீட்மெண்ட் செய்து வருகையில் பொருளாதார ரீதியாக மிகவும் குமைந்து போனார்கள். மகளைக் காப்பாற்றுவதற்காக கடன் வாங்கினார்கள். ஆனால் நிலைமை மோசமானதால் சாகித்யா வெள்ளிக்கிழமையன்று இறந்துபோனாள்.

தன் அன்பு மகள் இறந்து போனது தெரிந்த போதும் லாக்டவுன் காரணமாக பாஸ்கர் துபாயிலிருந்து வர இயலாத நிலைமை ஏற்பட்டது. அதனால் செய்வதறியாமல் வீடியோகால் மூலம் தந்தைக்கு காண்பித்தார்கள்.

எதுவும் செய்ய இயலாமல் வீடியோகால் மூலம் சாகித்யாவின் இறுதிச்சடங்கை காட்டினார்கள். இந்த விஷயம் அறிந்த உள்ளூர்வாசிகள் கண்ணீர் விட்டார்கள். எந்த தந்தைக்கும் இதுபோன்ற கஷ்டம் வரக்கூடாது என்று வருந்தினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.