தொழுகையை தடுக்கச் சென்ற போலீஸ் மீது சரமாரி கல்வீச்சு! ஹுப்ளியில் முஸ்லிம்கள் அராஜகம்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
police attacked by muslims - 2026

நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கும் போது, தொழுகைக்காக கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்குச் சென்ற போலீஸார் மீது முஸ்லிம்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இது குறித்த வீடியோ வைரல் ஆனது.

தில்லி நிஜாமுதீன் என்ற இடத்தில் நடந்த மார்கஸ் முஸ்லிம் மத பிரார்த்தனையில் பங்கு கொண்டவர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அவர்கள் மூலம் மேலும் பலருக்கும் வைரஸ் பரவி வருகிறது. இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள் .

இந்நிலையில்… கர்நாடகாவில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெள்ளிக்கிழமை ஹூப்ளியிலுள்ள மத்தூரில் மத பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனால் களத்தில் இறங்கிய போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்வதற்கு முயற்சி செய்த போது முஸ்லிம்கள் அனைவரும் சேர்ந்து போலீசார் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த கும்பல் வன்முறைச் சம்பவத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தார்கள்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று போலீஸ் கமிஷனர் ஆர் திலீப் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.