குழந்தைகள் மிகவும் விரும்பும் உருளை கிழங்கு ஜிலேபி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
potato 1 1 - 2026

உருளை கிழங்கு ஜிலேபி

தேவையான பொருட்கள்

உருளைகிழங்கு -2
மைதா மாவு -1 கப்
ஸ்பூன்பேக்கிங் பவுடர் -1/4டீ
ஆரஞ்சு கலர் -சிறிய அளவு
சர்க்கரை -2கப்
தண்ணீர் -1.5கப்
ஏலக்காய் பொடி -1மேஜை கரண்டி
எலுமிச்சை சாறு – சிறு துளி
எண்ணெய் -பொரிப்பதற்கு
நெய் -சிறிதளவு

pototo jelepi - 2026

செய்முறை:

உருளை கிழங்கு நன்கு வேக வைத்து மசித்து மைதா மாவு சேர்த்து, ஆரஞ்சு கலர் சேர்த்து, அதன் பின் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரை பாகு காய்த்து ஏலக்கை தூள் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

ஒரு ஜிப் லாக் கவரில் மாவு நிரப்பி மாவை அதில் நிரப்பவும். சிறியதாக கவரில் ஓட்டை போடவும்.

இன்னொரு கடாயில் எண்ணெய் நெய் சேர்த்து நன்றாக சூடாக்கவும். பொரிக்கும் போது எண்ணெய் சூடாக இருக்கணும். ஜிலேபி வடிவத்தில் மாவை சுற்றி ஊத்தி பொரித்து எடுக்கணும்.

பொறித்தவுடன் உடனே ஜீராவில் போட்டு 2 நிமிடம் ஊற வைத்து எடுக்கணும்

சுவையான உருளை கிழங்கு ஜிலேபி தயார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.