மது விற்பனைக்கு அனுமதி இல்லை: கேசிஆர் உறுதி!

இந்தியா லைஃப் ஸ்டைல்
kcr telangana - 2026

கொரோனா காரணமாக தெலங்காணா அரசாங்கம் மது விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது. அதனால் குடிமகன்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மதுவிற்பனையை நிறுத்திய பின் குடிமகன்கள் மன அமைதி இன்றி மனநல மருத்துவ மனைக்குக் கூட அதிக எண்ணிக்கையில் சென்று சேர்ந்து உள்ளார்கள். சிலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள்.

சில மாநிலங்களில் மது இல்லா விட்டால் தாங்கமுடியாத பேஷண்ட் களுக்காக ஆன்லைன் மது விற்பனையை அமல் செய்துள்ளார்கள். இப்படி இருக்கையில் சில நாட்களாக தெலங்காணாவில் மது விற்பனை ஏப்ரல் 15ல் இருந்து தொடங்கும் என்ற செய்தி வைரலாக சுற்றி வந்தது. இதனால் குடிமகன்கள் மிகவும் ஆசையோடு ஏப்ரல் 15ம் தேதிக்காக எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் அவர்களுக்கு முதல்வர் மீண்டும் ஏமாற்றமே அளித்துள்ளார். பிரதமர் மோடியோடு வீடியோ கான்பரன்சின் பிறகு தெலங்காணா முதல்வர் கேசிஆர் செய்தியாளர்களோடு உரையாடினார். அப்போது அவர் லாக்டௌன் எடுக்கும் வரை… முழுமையாக எடுக்கும் வரை மது விற்பனைக்கு அனுமதிக்க இயலாது என்று தெளிவுபடுத்தி விட்டார். அது குறித்த அவருடைய செய்தியாளர் கூட்ட பேச்சு வைரலாகி வருகிறது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.