கொரோனா: காங்கிரஸ் மூத்த தலைவர் பத்ரூதீன் ஷேக் உயிரிழப்பு!

இந்தியா பொது தகவல்கள்
பத்ரூதீன் ஷேக்
பத்ரூதீன் ஷேக்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்., மூத்த தலைவரான பத்ருதீன் ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த பத்ருதீன் ஷேக்கிற்கு (68) கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து எஸ்.வி.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பத்ரூதின் ஷேக் மறைவுக்கு காங்., செய்தி தொடர்பாளர் சக்திசிங் கோஹில் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.அதில், ‘என் நண்பர் பத்ரு ஒரு உண்மையான கொரோனா போர் வீரர்.

குஜராத்தில் ஆமதாபாத்தில் ஏழை மக்களுக்கு உதவும் போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவரது மறைவால் குஜராத் காங்கிரஸ் குடும்பத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அனைவருக்கும் இது ஒரு பாடம். தயவுசெய்து கவனித்து உங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.