
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில், இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட வழக்கு தொடர்பாக அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றபத்தரிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறி இருப்பதாவது:-

ஐ.எஸ். இயக்கத்தின் கொள்கைளை முஸ்லீம் இளைஞர்கள் மத்தியில் பரப்பி, அந்த இயக்கத்துக்கு ஆள் திரட்ட மற்றும் ஆதரவாக செயல்பட ரகசிய பயிற்சி வகுப்புகள் கோவையில் நடந்துள்ளன
இதில் பல்வேறு முஸ்லீம் இளைஞர்கள் பங்கேற்று உள்ளனர். அதில் பங்கேற்றவர்கள் விவரங்களை நாங்கள் சேகரித்து உள்ளோம்.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வேலைக்கு செல்லும் போர்வையில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து,
ஐ.எஸ். இயக்கத்தில் சேர்த்து போரிடுவதற்காக சிரியாவுக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் உள்ளது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து கோவையை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தொடர்ந்து தமிழக போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான பட்டியலை போலீசார் சேகரித்து வருவதுடன், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவையிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



