சவப்பெட்டிக்குள் மறைத்து.. அதிரடியாய் கைது செய்த போலீஸ்!

உலகம் கிரைம் நியூஸ் பொது தகவல்கள்
sava petti

கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவிலும் கொரோனா காரணமாக கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்னாபிரிக்காவில் கொரோனாவிற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியில் வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தியுள்ளனர்.

அந்த காரில் மிகவும் புத்திசாலித்தனமாக உடையணிந்திருந்த இரண்டு பேர், தாங்கள் இறுதிச் சடங்கை நடத்தும் இயக்குனர்கள் என்றும் உடலை தகனம் செய்வதற்காக சவப் பெட்டியில் வைத்து கொண்டு செல்கிறோம் என்று போலீசாரிடம் கூறியுள்ளனர்.

sava petti 1

இவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் சவப்பெட்டியை திறந்து காட்டும் படி கூறிய போது, அவர்கள் மறுத்துள்ளனர். இது போலிசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால், போலிசார் சவப்பெட்டியை திறந்து பார்த்த போது, உள்ளே 30 பொட்டலங்களில் சுமார் 80 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 35,000 டாலர் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.