‘தல’ யின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படம் அப்டேட்! தயாரிப்பாளர் கூறுவது என்ன?

Published:

போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – நிரவ் ஷா.

bcfc41aade974efe5fd59c14da0ebde8 - 2026

கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இச்சமயத்தில் தாங்கள் தயாரிக்கும் படங்களின் தகவல்கள் எதையும் வெளியிட மாட்டோம் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதையடுத்து மே 1, அஜித் பிறந்த நாளன்று வலிமை படம் பற்றிய எந்தவொரு அப்டேட்டும் வெளிவராது என்று அறியப்படுகிறது.

0ad6d474f2b327eae994acf26029fe84 - 2026

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – நிரவ் ஷா.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

d9058a003573d3d8588f68178485df07 - 2026

கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில் உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்யவேண்டாம் என எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

3accbb50bc1e8f8cd32b06cc211976f4 - 2026

இதையடுத்து அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று வலிமை படம் தொடர்பான எந்தவொரு தகவலும் வெளிவராது என்று அறியப்படுகிறது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img