தளபதி 65 படத்தை இயக்கப்போவது இவர்தான்! – வாயை பிளக்கும் கோலிவுட்

Published:

ரஜினிக்கு பின் விஜய் யாருடைய படத்தில் அடுத்து நடிக்கபோகிறார் என்பதுதான் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை முடித்த விஜய் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஒரு புதிய படத்தில் நடிக்கவிருந்தார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டார்.

இந்நிலையில், நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா இயக்கியவரும், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருபவருமான நெல்சன் இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது. 

melson

இப்படம் ஒரு காமெடி கதையாம். மேலும், நெல்சன் கூறிய கதையை சன் பிக்சர்ஸ் கூறிய பட்ஜெட்டில் எடுத்துவிடலாம் என்பதால் இப்படமே தனது 65வது படம் என விஜய் முடிவெடுத்துவிட்டதாக தெரிகிறது. 

எனவே, விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img