
ரஜினிக்கு பின் விஜய் யாருடைய படத்தில் அடுத்து நடிக்கபோகிறார் என்பதுதான் சினிமா உலகம் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை முடித்த விஜய் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஒரு புதிய படத்தில் நடிக்கவிருந்தார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து அவர் விலகிவிட்டார்.
இந்நிலையில், நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா இயக்கியவரும், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருபவருமான நெல்சன் இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது.
அதேநேரம் ஈட்டி திரைப்படத்தை இயக்கிய ரவி அரசு கூறிய கதையும் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாம். ஆனால், நெல்சன் கூறிய கதை மிகவும் பிடித்த அதை ஓகே செய்துவிட்டார் விஜய். எனவே, விஜய்க்கு கூறிய கதையை விஷாலை நடிக்க வைக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகிறதாம். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Source: Vellithirai News



