
ஏற்கனவே பிக்பாஸ் தமிழ் 3 சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது 4வது சீசன் துவங்கியுள்ளது. இந்த முறையும் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். டிவி நடிகை ஷிவானி, மாடல் சம்யுக்தா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, நடிகர் ஆரி, பாலாஜி முருகதாஸ், பாடகர் ஆஜித், நடிகை ரேகா, பாடகர் வேல்முருகன், ரியோ ராஜ், கேப்ரியல்லா, ஜித்தன் ரமேஷ், அனிதா சம்பத், சோம் சேகர் ஆகியோரில் வேல்முருகனும், நடிகை ரேகாவும் வெளியேறிவிட்டனர்.
புதிய வரவாக ரேடியோ தொகுப்பாளினியும், பாடகியுமான சுசித்ரா உள்ளே வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் தினமும் பல பஞ்சாயத்துக்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார். தமிழகர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருப்பதாகவும், கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
Source: Vellithirai News



