இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி போட்டோவ போடுவீங்க! – நயனுடன் நெருக்கமாக விக்கி

சினி நியூஸ் சினிமா
d3b05d887b2dd40e0d3661536ceea01b - 2026

நடிகை நயன்தாராவும்,இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது ஊரறிந்த செய்தி. இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். எங்கு சென்றாலும் ஜோடியாக செல்லும் அவர்கள் தங்களின் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

காதலர் தினம், பிறந்த நாள், புதிய வருடப்பிறப்பு என அனைத்து விழாக்களிலும் வெளியூர் சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட இருவரும் கோவா சுற்றுலா சென்றனர். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், அழகான ஒரு அறையில், இருவரும் கருப்பு உடை அணிந்தபடி நெருக்கமாக நிற்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்து 90 கிட்ஸ்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி போட்டோ போட்டுக்கிட்டே இருப்பீங்க.. எப்போது கல்யாணம்?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.