நவ.16 முதல் கோயில்களில் குடமுழுக்கு நடத்தலாம்: அரசு அனுமதி!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
thirupparankundram-murugan-temple
thirupparankundram-murugan-temple

திருக்கோவில்களில் வருகிற நவ.16 திங்கட்கிழமை முதல் கொரோனா காரணமாக தடை பட்டிருந்த  குடமுழுக்கு திருவிழாக்களை நடத்தலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வருகின்ற நவ.16  திங்கட்கிழமை முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதிக்கப்படுகிறது. 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழாவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் குடமுழுக்கு விழாவில் பங்கேற்போர், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.