
தமிழ் மன்னன் ராஜராஜசோழன் கட்டிய “தமிழர்களின் கலைபண்பாட்டு அடையாளம்” தஞ்சாவூர் பெரியகோயில் குறித்து அவதூறு பேசிய “இஸ்லாமிய ஜோதிகாவே” இந்து கோவில்களை பற்றி பேசாதே! மன்னிப்புகேள்!! – என்று குரல் எழுப்பியுள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்…
“செல்பி “நடிகர் சிவக்குமார் மருமகளும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான முஸ்லிம் மதத்தை சார்ந்த நடிகைஜோதிகா JFWAwards2020 இந்த விருது வழங்கும்
விழாவில் பேசும்போது, “தான் தஞ்சாவூருக்கு படப்பிடிப்புக்கு சென்ற போது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்சென்று வாருங்கள் என சொன்னார்கள். உதய்பூர் அரண்மனை போல மிக அழகாகஇருக்ககூடியது. நல்லா பராமரிக்கிறார்கள். ஆனால் அங்கே ஒரு ஆஸ்பத்திரி நிலைமையை பார்த்த பிறகு மனது மிக கஷ்டமாக இருந்தது.
அதனால நான் உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். “கோயிலுக்காக அவ்வளவு காசு செலவு பண்றீங்க, “உண்டியலில் காசு போடாதீங்க” “பெயிண்ட் பண்ணுறீங்க” அதே காசு ஹாஸ்பிடல்ல போடுங்க..! ஸ்கூல் பில்டிங் மேல போடுங்க! டொனேஷன் பண்ணுங்க என்றுபேசி உள்ளார்.
“ஆனால் அந்த கோவிலுக்கு நான் செல்லவில்லை” என்றும் பேசினார். திரைதுறையில் பிரபலமாகி விட்டால் எதையாவது பேச வேண்டும்; என்பதற்காக தேவையற்ற சர்ச்சை கருத்துக்களை பேசி வருவது என்பது சமீபத்திய திரைதுறையில் பலரின் தொடர் நிகழ்வாக இருக்கிறது.

அடிப்படையில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த நடிகைஜோதிகா தமிழ் மன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தமிழர் கலை பண்பாட்டு அடையாளமாக இருக்கக்கூடிய தஞ்சை கோவிலைப் பற்றி தேவையற்று பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இந்து தமிழர்களின் நம்பிக்கை அடையாளத்தை கொச்சைப் படுத்தும் விதத்தில் இந்துக் கோவில்களை மட்டும்உதாரணப் படுத்தக்கூடிய நடிகை ஜோதிகா இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களை கட்ட வேண்டாம் என்று சொல்லாமல், குறிப்பாக இந்து கோவிலை மட்டும் சொன்னது இந்து மத அவமதிப்பு. தேவையற்ற மத ஒப்பீட்டு வாதத்தை உருவாக்கியிருக்கிறது.
இதற்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தை நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம். மேலும் தஞ்சை கோவில் குடமுழுக்கு சமயத்தில் ராஜராஜன் பரம்பரை ,தமிழ் மொழிக்கு நாங்கள்தான் உரியவர்கள் என்றெல்லாம் பேசிய “தமிழ் மொழி காவலர்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்; கொதித்தெழுந்தவர்கள்; திருக்கோயிலுக்கு உரிமை கோரியவர்கள் இப்பொழுது எங்கே சென்றார்கள்? என்று தெரியவில்லை.
நடிகை ஜோதிகா விருது வாங்கினோம் சென்றோம் என்று இல்லாமல் ஊருக்கு உபதேசம் செய்யக்கூடிய வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் மீதும் மாணவர்கள் மீது இவ்வளவு அக்கறை இருக்குமேயானால் தனது கணவன் சூர்யா நடிக்கும் சினிமாவை இவ்வளவு பணம் கொடுத்து யாரும் பார்க்க வேண்டாம் என்று சொல்ல தைரியம் உண்டா?
“கலை கூத்தாடி” ஜோதிகா தமிழர்கலைப்பண்பாட்டு தமிழர் கட்டிடகலை அடையாளத்தை கொச்சைப்படுத்தி பேசியதற்கு தமிழ்சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் “தமிழ் சமூகம் வருங்காலத்தில் இதுபோன்று பேசுபவர்களை செருப்பால் அடிக்கும்.”
சட்ட வல்லுநர்கள், சிவனடியார்கள், இந்து மத நம்பிக்கையாளர்கள் மற்றும் மாமன்னர் ராஜராஜன் மீது பற்று கொண்ட தமிழ் சமுதாயத்தினர் அனைவரும் நடிகை ஜோதிகா பேசிய விஷயத்திற்கு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் முன் வைக்கிறோம்… என்று கூறியுள்ளார்.