karur muslim - 2026

பேஸ்புக் மற்றும் டுவீட்டர்களில் மட்டுமே அரசியல் செய்யும் அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கு எதிராக இஸ்லாமியர்கள் கடும் கண்டனங்கள் !

அரவக்குறிச்சி தொகுதியினை மறந்து கரூர் தொகுதியில் அமைச்சருக்காக அரசியல் செய்வதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு !

பள்ளப்பட்டி இஸ்லாமியர்களின் வாக்குகள் பெற்று ஜெயித்த செந்தில்பாலாஜியின் செல் எண் நாட் ரீச்சபள் மற்றும் பிஸியாகவே இருக்கின்றதாகவும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தத்து எடுத்து கொண்டு உதவுமாறும் இஸ்லாமியர்கள் வேண்டுகோள் !!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமாகவும் இருக்கின்றார். இந்நிலையில்,. கடந்த சில தினங்களாக, கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜி, கொரோனா நிவாரணப்பொருட்கள் சுமார் 550 மதிப்புள்ள பொருட்கள் இலவசம் என்றும் அதற்காக அவரது எண்ணும், அவரது உதவியாளர் எண்ணும் அறிவிக்கப்பட்டிருந்தது.

karur muslim1 - 2026

ஆனால், அந்த இரு எண்களும் எப்போதும் செல் எண் நாட் ரீச்சபள் ஆகவும்., ஒரே பிஸியாக இருப்பதாக கூறுகின்றனர். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி மக்களின் பெரும்பாலான வாக்குகளை பெற்று தான் ஜெயித்த இவர், பள்ளப்பட்டி மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்காமல், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாகவும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் அரசியல் செய்வதற்காக, கரூர் தொகுதி மக்களிடம் கொரோனா நிவாரணப் பொருட்களை தந்து வருவதாக, வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில், புகைப்படம் பதிவிட்டு வருகிறார் என்கின்றனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

எனவே இஸ்லாமியர்கள் ஏற்கெனவே கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், தற்போது, கொரோனா தொற்று இருப்பதை கண்டு அவருக்கு தேவையானவர்களுக்கு மட்டும் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகளை தந்து வருவதாகவும், அதே நேரத்தில், அரசியலுக்காக, இஸ்லாமியர்கள் பழிவாங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், பள்ளப்பட்டி மக்களை தத்து எடுத்து கொள்ளுமாறும், ஏற்கனவே நம்பி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கும் வாக்குகள் அளித்தோம் என்றும், ஆனால் அவர்கள் வெறும் பேஸ்புக்கிலும், டூவிட்டரிலும், வாட்ஸ் அப்பிலும் தான் நலத்திட்ட உதவிகள் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏற்கனவே இஸ்லாமியர்களின் வாக்குகளையும், அவர்களை வைத்து தான் அரசியல் செய்து வந்த தி.மு.க கட்சியின் தலைமை இவர் மீது தனிக்கவனம் செலுத்துமா ? என்ற கேள்விக்குறியும் தற்போது எழுந்துள்ள நிலையில்,. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள் சுமார் 30 ஆயிரம் நபர்கள் தற்போது பெரும் விரக்தியில் உள்ளனர்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending