அடடே ஷூட்டிங்கா? மக்கள் துணை நடிகையரா? பூ தூவ நடந்துவந்து… சர்ச்சையில் சிக்கிய ரோஜா!

Published:

roja in nagari - 2026

பூக்கள் மாரியாகப் பொழிய… இரு பக்கமும் துணை நடிகையர் பூக்களை எடுத்து பூசிப்பது போல் எடுத்து வீச… ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் கம்பீரமாக ஒரு கதாநாயகி நடந்து வருவது போல் நடந்து வர… நடிகை ரோஜாவால் ஏற்பட்டிருக்கிறது ஒரு சர்ச்சை. அதுவும் ஒரு பம்புசெட்டு திறந்து வைக்க தனது நகரி தொகுதிக்கு வந்தவருக்கு இவ்வளவு அலம்பலா என்று அவரை விமர்சித்தவர்கள் மீது எரிந்து விழுந்தார் ரோஜா.

ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் ஒய்சிபி எம்எல்ஏ ரோஜா மறுத்தும் எதிர்த்தும் பேசுவதில் ஈடுபட்டார் என்பது பரபரப்பு செய்தி ஆகியுள்ளது.

லாக்டௌன் நேரத்தில் புத்தூர் சுந்தரையா நகரில் போர்வெல் திறப்பு விழாவுக்கு சென்றார் ரோஜா. அந்நேரம், சாலையின் இருபுறமும் மக்கள் நின்று கொண்டு, ரோஜா நடந்து வரும் பாதையில் அவரது காலில் பூமாரி பொழிந்தனர்.

பூக்களை அள்ளித் தெளித்த போது அதன் மேல் நடந்து கொண்டு சென்றதால் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் ரோஜா. அதனை எதிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். தன் சொந்த ஊரில் அவர்களுக்கு தேவையான பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்தளித்த ரோஜா தான் செய்துவரும் உதவி குறித்து சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் வருவதையும் காமெண்ட்ஸ் செய்வதையும் குறித்து எரிந்து விழுந்து ஆத்திரப் பட்டார்.

தெலுகு தேசம் கட்சித் தலைவர்களை டார்கெட் செய்து எரிந்து விழுந்தார். அவர் பூ பாதையில் நடந்து வருவதையும் அவ்வாறு செய்தவர்களுக்கு நன்றி கூறியதையும் வீடியோ வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ரோஜா. அதனால் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நேரத்தில், ஒரு புறம் ட்ரீட்மெண்ட் ஒரு விதமாகவும், ரோஜா போன்றவர்களு ட்ரீட்மெண்ட் வேறு விதமாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்துகளை அள்ளித் தெளித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img