மதுரை திருப்பரங்குன்றம் அருகே வேலியில் சிக்கி காயமடைந்த கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் மீட்ட வனத்துறையினர் மீட்டு அதனை வனப்பகுதியில் விட்டனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கூத்தியார்குண்டு கிராமத்தில் சேது என்பவருக்கு சொந்தமான வயலில் கோழி வளர்த்து வருகிறார். அதற்காக போடப்பட்ட வேலியில் இன்று 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது.
இதை கண்ட சேது உடனடியாக பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற திருநகரை சேர்ந்த உயிரியல் மற்றும் ஊர்வன ஆர்வலர் சகாதேவன் என்பவருக்கும், வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
அங்கு வந்த மதுரை வனத்துறையினர், ஊர்வன ஆர்வலர் இணைந்து வேலியில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை அரை மணி நேரமாக போராடி பத்திரமாக மீட்டனர். வேலியில் சிக்கியதால் பாம்பிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வனத்துறையினர் அதற்கு உரிய சிகிச்சை அளித்து பாம்பை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு என தெரிந்தும் வேலியில் சிக்கிய அந்த பாம்பை தைரியமாக மீட்ட சமூக ஆர்வலரை வெகுவாக பொதுமக்கள் பாராட்டினர்.