நேற்றைய தீர்ப்பை யாரும் மதிக்கவில்லை! பின்பற்றவில்லை! உயர் நீதிமன்றமே உடனே தலையிடு!

உரத்த சிந்தனை சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
arjun sampath

டாஸ்மாக் கடைகள் திறப்பு விஷயத்தில் நீதிமன்ற உத்தரவுகள், நிபந்தனைகள் மீறப்படுகின்றன! உயர்நீதிமன்றத்திற்கு அவமதிப்பு! உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தானாக முன்வந்து விசாரணை செய்து உடனடியாக மதுக்கடைகளை பூட்ட வேண்டும்! இல்லையெனில் கரோனா நோய் தொற்று பரவும் வேகம் அதிகரிக்கும்! தமிழகம் சுடுகாடாக மாறிவிடும்! உயர் நீதிமன்றமே உடனே தலையிடு! நேற்றைய தீர்ப்பை யாரும் மதிக்கவில்லை! பின்பற்றவில்லை! டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும்!

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது! அர்ஜுன் சம்பத் கண்டனம் உடனடியாக விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரியும்! கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு தடுப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்த கோரியும்! திருக்கோயில்களை உடனடியாக திறந்து, பக்தர்கள் தரிசனம் செய்யவும், பூஜைகள் நடைபெற வழிவகை செய்யவும் வலியுறுத்தி!

இன்று சத்யாகிரக போராட்டம்! காலையிலிருந்து வீட்டுக்காவல்! இப்பொழுது என்னை கைது செய்து செல்வபுரம் காவல் நிலையம் அழைத்துச் செல்கிறார்கள்! இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற பொழுது போலீஸ் வேன் கோவை மாநகரில் முக்கிய தெருக்கள் வழியாக பலத்த பாதுகாப்போடு என்னை அழைத்துச் சென்றார்கள்.

வழியில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை கவனித்தேன். குடி வெறியர்கள் உற்சாகத்தோடு டாஸ்மாக் கடை முன்பு குவிந்து இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை. காவல்துறை கையறு நிலையில் உள்ளது. இதை நேரடியாக நான் இன்றைக்கு பார்த்தேன். 30 நிமிட பயணத்திற்கு பிறகு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் திருக்கோயில் அருகாமையிலுள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளேன்.

நமது சத்தியாக்கிரக போராட்டம் வெல்லும்! மதுக்கடைகள் மூடப்படும்! தமிழகம் காப்பாற்றப்படும்

  • அர்ஜுன் சம்பத் (இந்து மக்கள் கட்சி, நிறுவன தலைவர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.