
திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலிபுரம் கோட்டபாளையம் கலர்மேடு பகுதியை சார்ந்தவர் வேல்முருகன் (வயது 30). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ரஞ்சனா (வயது 22). இவர்களுக்கு இரண்டு வயதுடைய கமலேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில், ரஞ்சனா தற்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். வேல்முருகன் தனது மனைவி, குழந்தை, பெற்றோர்கள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 15 ஆம் தேதியின் போது தருமபுரிக்கு பணிக்காக வேல்முருகன் சென்றுள்ளார்.
இந்த சூழ்நிலையில், நேற்று திடீரென காலை 7 மணியளவில் வீட்டின் குளியறைக்கு மகனை தூக்கிச்சென்ற ரஞ்சனா, குளியறையை தாழிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இருவரும் உடலில் தீயின் வெப்பம் தாளாது அலறித்துடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இவர்களை மீட்டுள்ளனர்.

இருவரும் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பட்டனர். இதில், தாயும் – மகனும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தர்மபுரியில் பணியாற்றி வந்த வேல்முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.