ஏப்ரல் 21, 2021, 3:54 மணி புதன்கிழமை
More

  திருப்பதியில் குறைகளை இவரிடம் கூறினால் போதும்..!

  Thirupathi

  திருப்பதியில் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார். கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார்.

  வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.

  பரமபதநாதர் (சிவப்பு வண்ண கட்டமிடப்பட்டிருப்பது), அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர் தான்
  விமான வெங்கடேஸ்வரர்.

  ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.
  இது ஒரு வெள்ளை அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும்.

  இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.

  அதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும்.

  இது ஒரு சிவப்பு அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும்.

  உள்ளே, சுவாமியை நாம் கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்களை சொல்ல முடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்கிறார். இவர்கிட்ட நமது வேண்டுதல்களை மனசார சொல்ல அது அப்படியே மூலவர் கிட்ட சொன்னமாதிரி நிச்சயம் நல்ல பலன் தரும்.

  இனிமே, திருப்பதிக்கு போறவங்க. ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செய்துவிட்டு வந்துவிடாமல் அவருக்கு பக்கத்தல் இருக்கும் பரமபதநாதரையும் வணங்கி அருள் பெறுக.

  இவரை எப்பொழுது தரிசனம் செய்தாலும் வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என ஆகமங்களில் கூறப்பட்டிருக்கிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »