கொரோனா இன்று 600 பேருக்கு உறுதி; சென்னையில் மட்டும் 399 பேர்! 3 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
tamilnaducorona

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 600 அதிகரித்து, மொத்த பாதிப்பு 6009 ஆக அதிகரித்துள்ளது.

இன்று வெளியிடப் பட்ட சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் ப்ட்டுள்ளதாவது…

தமிழ்நாட்டில் இன்று 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆண்கள் 405 பேர், பெண்கள் 195 பேர். இன்று மட்டும் 13,980 மாதிரிகள் சோதனை செய்து, அதில் 600 பேருக்கு உறுதியாகியுள்ளது.

இன்றைய பாதிப்பு 600ஐயும் சேர்த்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 399 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,043ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ தாண்டியது, அதே போல், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் 2 பேரும், திருநெல்வேலியில் ஒருவரும் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் 80% பேருக்கு கொரோனா அறிகுறி இல்லாமலேயே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்ட 58 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதை அடுத்து, கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

செங்கல்பட்டு: 26 பேர், விழுப்புரம்: 21 பேர், திருவண்ணாமலை: 11 பேர், காஞ்சிபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 8 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.