மக்களின் பட்ஜெட்: நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Published:

pmmodi - 2026

பட்ஜெட் குறித்து பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், இது மக்களின் பட்ஜெட் என்று கூறியுள்ளார். இதற்காக #JanJanKaBudget என ஜனங்களுக்கான பட்ஜெட் இது என்ற பொருள்படும் ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் தொடர்ந்து கருத்துகளைப் பதிவு செய்தார். இதற்காக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பாராட்டுவதாகவும், இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மற்றும் நிதி அமைச்சக ஒட்டுமொத்தக் குழுவையும் பாராட்டுவதாகவும் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பட்ஜெட்! நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கும் பட்ஜெட்.

சுற்றுலாத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட் வழி ஏற்படுத்தியுள்ளது. டிவிடெண்ட் விநியோக வரி நீக்கம் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கை. பட்ஜெட் மூலமாக இளைஞர்களுக்கு அதிக பலன் கிடைக்கும்!

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

அடிப்படை கட்டமைப்புகள் முதலீடு அதிகரிப்பின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்! திறன் மேம்பாடு திட்டம் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதில் கிடைக்கும்! சுமார் 1 லட்சம் கிராமங்களில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்! மத்திய அரசின் பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு, தேர்வர்களின் சுமையை குறைக்கும்…! என்று கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img