தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு! கலர் கலரா டோக்கன்! என்றைக்கு என்ன டோக்கன் தெரியுமா?

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
tasmac color token

கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளை தவிர பிற இடங்களில் நாளையே டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்யதுள்ளது.

இதனால், சிவப்பு மண்டலங்களை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப் படும் என்று தெரிகிறது. டாஸ்மாக் கடைத் திறப்பு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற விதிகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட எஸ்.பி, காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி, 500 பேர் மட்டுமே நிற்க வேண்டும் அவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், மது வாங்க ஞாயிறு முதல் சனி வரை கிழமை வாரியாக வண்ண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் கடைக்கு வந்து மது வங்கிக் கொள்ளலாம் என்று கூறப் பட்டுள்ளது.

அதன்படி, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.