spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைசீனாவின் அடாவடிகளுக்கு எதிராக... இந்தியாவின் அமைதியான உறுதியான நடவடிக்கைகள்!

சீனாவின் அடாவடிகளுக்கு எதிராக… இந்தியாவின் அமைதியான உறுதியான நடவடிக்கைகள்!

- Advertisement -
kashmir road
kashmir road

காஷ்மீரில் டவுலட் பெக் ஓல்டியில் துவங்கும் இந்தியா தான் கன்யாகுமரியில் வந்து முடிகிறது.. இந்த டவுலட் பெக் ஓல்டியை சாலை மூலம் கனக்ட் செய்தது தான் சீனாவுக்கு இந்தியா மேல் ஏக கடுப்பு..

2015 இல் புருட்சே கேம்ப் என்னும் இடத்தில் சீனா தற்காலிக முகாம்களை அமைத்து அந்த இடம் தனக்கு சொந்தம் என்று சொந்தம் கொண்டாடியது.. ஆனால் அந்த புருட்சே கேம்ப் வழியாகவே இன்று இந்தியா சாலை அமைத்தது கட்டிடம் கட்டி முகாம் அமைத்ததை தான் சீனாவால் ஜீரணிக்கவே முடியவில்லை..
♦️2014 மோடி ஆட்சிக்கு வந்த நான்காவது மாததில் சீன ராணுவம் தென்கிழக்கு லடாக்கில் உள்ள ச்சுமர் கிராமத்திற்குள் ஊடுருவியது.. 300 சீன வீரர்கள் சீன எல்லை அருகே நின்றுகொண்டும், 50 சீனர்கள் இந்தியா உள்ளே வரை வந்தும் வாலாட்டினார்கள்.. இந்தியா உள்ளே வந்த சீனர்களுக்கு சீன ஹெலிகாப்டர்கள் உணவு பொட்டலம் வழங்கியது தான் புதிய அரசு ஏற்று இருக்கும் இந்தியாவை கடுப்பேற்றிய முதல் நிகழ்வு..

kashmir
kashmir

♦️இந்த உலகத்தில் ஈத்தர நாடு ஒன்று உண்டு என்றால் அது கம்யூனிச சீனா தான்.. காம்யூனிஸம் ரஷ்யாவில் ஆரமித்த நோக்கம் என்னமோ நியமான காரணம் தான்.. அன்று தன்னை காக்க அடுத்தவனை அழிக்க ஆரமித்த கம்யூனிஸம், இன்று தான் கொழுக்க அடுத்தவனை அழிப்பது தான் கம்யூனிஸத்தின் அடுத்த பரினாம வலர்ச்சி.. இப்படி சீனா தான் வளரவும், தான் பிரச்சனையை மறைக்கவும் தன்னை சுற்று உள்ள சின்ன நாடுகளை இம்சிப்பதையே அரசு கொள்கையாக வைத்துள்ளது.. ஆனால் இதை எல்லாம் புதிய இந்திய அரசு முறியடிக்க நினைத்ததன் செயல் வடிவமே அந்த SSN ரோட்..
டவுலட் பெக் ஓல்டி முதல் கோயுல் வரை இந்திய‌ ராணுவமும் டேங்கிகளும் எளிதாக செல்ல வழி செய்யும் சாலை தான் இந்த SSN ரோட். டவுலட் பெக் முதல் டெப்ருக் வரையில் எல்லா காலத்திலும் செல்வதற்கு ஏற்ற சாலை யாக இந்த 244 கிலோமீட்டர் பாதை சாலையாக மாற்றியது தான் இந்த அரசு சீனாவிற்கு தந்த மாபெரும் பதிலடி ..

kashmir
kashmir

இந்த சாலை அமைக்கும் திட்டம் 2008 லேயே 360 கோடி செலவில் துவங்க பட்டது.. இந்த சாலை சோயூக் நதியேரம் செல்வதால், ஜீலை முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், இமயமலையின் ஏராளமான பணி உருகி இந்த ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு போட்ட சாலைகளை எல்லாம் பாழாக்கியதால் இந்த திட்டம் கிடப்பில் போட பட்டது.. ஆனால் இந்த அரசு, இந்த நதியில் எங்கு எல்லாம் வெள்ளப்பெருக்கு வருமோ அங்கு எல்லாம் அங்கு எல்லாம் பாலங்கள் கட்டி இந்த சாலையை 2019 ல் நிறைவு செய்தது..

16000 அடி உயரத்தில் ,244 கிலோமீட்டர் சாலை, அதில் 37 பாலங்கள், என இந்த சாலையை அமைக்க ஒரு மாபெரும் பொறியியல் சாதனையையே செய்து சீனர்களுக்கு புதிய இந்தியாவை காட்டியது..

அதே போல் டெப்ரூக் முதல் கேய்லா வரையிலான சாலையும் ஆல் வெதர் சாலையாக மாற்ற பட்டது.. இதன் மூலம் தவுலத் பெக் ஓல்டி முதல் ச்சூஷல், ப்புக்செ (கோயுல்) ஆகிய இடத்தில் உள்ள விமனதளங்கள் ஆல் வெதர் சாலை மூலமாக இணைக்க பட்டன.. ப்புக்செ மிக அருகில் இந்தியாவின் மிக முக்கிய படை தளம் டெம்சாக் வருவதாலும்,

kashmir
kashmir

டெம்செக்கிற்கு மிக அருகில் அக்சாய் சின் வழியாக, சீன திபேத் நெடுஞ்சாலை வருவதாலும் சீனாவுக்கு இந்த சாலை அமைத்தும் ஏக கிளி. அதிலும் இந்த சாலை கல்வான் பல்லாதாக்கு பகுதியில் சீன எல்லைக்கு 9 கிலோமீட்டர் அருகே செல்கிறது.. ஒருகாலத்தில் எங்கு எல்லாம் சீனா தங்கள் இடம் என கூடாரம் அமைத்ததோ இன்று அந்த இடத்தில் எல்லாம் இந்திய ராணுவத்திற்கான அல் வெதர் சாலை, சுருக்கமாக சொன்னால் முன்பு பைனாகுலரில் பார்தாலும் தெரியாத துரத்தில் இருக்கும் சீன படைகளை, இந்தியா அவர்களுக்கு அருகே சென்று சாலை அமைத்து இன்று கெத்தாக அவர்களை கண்ணுக்கு கண் பார்த்து முறைத்தால் சீனா காரணுக்கு எப்படி இருக்கும்??..

ஏற்கனவே 2016 ல் சீன ராணுவம் 273 முறைக்கு மேல் இந்திய எல்லையில் ஊடுருவியதற்கு பதிலடியாக அங்கு 100 T72 டேங்கிகளை அமர்த்தியது. இப்போது அந்த டேங்கிகள் பறந்து செல்ல சாலைகள்.. இது எல்லாம் நிச்சயம் என்றாவது ஒரு நாள், இந்தியா அக்சாய்சின்னை கைபற்றும் திட்டம் தான் என சீனாவிற்கு இந்தியா உணர்த்தியது..

அதே போல் டோக்லாம் நிகழ்வுக்கு பின் இந்திய ராணுவத்தினர் சீனாவை அணுகும் முறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதுவரை சீனர்கள் இந்திய எல்லைக்குள் வந்தால், இந்தியா, “இது எங்கள் இடம்” என்னும் பாதாகைகளை காட்டி மைக்கில் சத்தம் மட்டுமே எழுப்புவார்கள். ஆனால் இந்த மே 5 ஆம் தேதி கல்வான் அருகே ஊடுறுவிய சீனர்களை இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கி எலும்புகளை முறித்து அணுப்பி உள்ளனர் இந்திய ‌ராணுவத்தினர்.. மே 9 ஆம் தேதி சீக்கீமில் ஊடுருவிய சீனர்களின் பல்லை உடைத்து அணுப்பி உள்ளது.. மே 14 ஆம் தேதி இந்திய எல்லை அருகே பறந்த சீன ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த நம் சுகாய் விமானம் ஆயத்தமானதால் அந்த ஹெலிகாப்டர் பின் வாங்கியது.. இப்படி சீன அளுமைக்கு உட்பட்ட பகுதியாக சீன சொல்லும் இடத்தில் எல்லாம் இன்று இந்தியா கொடி..

சீனாவை மோப்பம் பிடிக்க இந்தியாவிற்கு பெரிய உளவுப்பிரிவு எல்லாம் தேவை இல்லை.. இங்குள்ள கம்யூனிஸ்ட்களை மோப்பம் பிடித்தாலே போதும்.. நண்டு கொழுத்தால் வலை தங்காது என்பது போல் சீன பணம் வந்து விட்டால் இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் அரசுக்கு எதிராக போராட்டம் ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுவான்… அதைவைத்து இந்தியா சீனாவை மோப்பம் பிடித்து அதற்கு தக்க பதிலடியை, தருவது தான் இந்தியாவின் புது ஸ்டைல்.. இன்றைய அரசின் பதிலடி நடவடிக்கைகளால் 2016 முதல் 2018 வரை 1025 முறை ஊடுறுவிய சீனா 2019 ல் ஓரீரு முறை மட்டுமே ஊடுருவியது..

சீனா ஊடுருவி காலம் போய் இன்று சீன பத்திரிக்கைகள் இந்தியா சீன எல்லையில் ஊடுறுவி அந்து மீறி கட்டிடக்கள் கட்டியுள்ளது என்று குறை சொல்லும் அளவு வளர்ந்தது தான் புதிய பாரதம்..

இருந்தாலும் அக்சாய் சின் போன்ற வறண்ட பனிப் பாலைவனம் இந்தியாவுக்கு இரண்டாம் பட்சம்தான்! அதற்காக காலம், நேரம் பணத்தை வீணாக்குவதை விட, கில்கிட், பல்டிஸ்தான் ஆகியவற்றைக் கைப்பற்றுவதையே இந்தியன் விரும்புகிறான்!

  • ???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe