கால்நடைகளுக்கு கைகொடுத்து… விவசாயிகளுக்கு மன உளைச்சலை அளித்து…. மதுரை மழை!

சற்றுமுன்
மதுரை நெற்பயிர் வெள்ளத்தில்

கால்நடைகளுக்கு கைகொடுத்த மழை விவசாயிகளுக்கு மன உளைச்சலையும் அளித்தது என்கிறார்கள் அண்மைய மதுரை மழை குறித்து!

மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கு புல்கள் முளைத்து நன்மை செய்த மழையானது, விவசாய நிலங்களுக்குள் புகுந்து அறுவடையையும் பாதிக்கச் செய்துள்ளது என்கிறார்கள்.

மதுரை அருகேயுள்ள பேரையூர், கல்லுப்பட்டி, வாடிப்பட்டி, சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம்,காடுபட்டி, விக்கிரமங்கலம், வி. கோவில்பட்டி, அயனார்குளம், திடியன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் பல கிராமங்களில் வறண்ட தரிசு நிலங்களில் புல், பூண்டுகள், செடிகள் வளரத் தொடங்கியுள்ளன. இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கு இந்த மழையானது பெரிதும் உதவியுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.