தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா!

Published:

corona spread worldwide

தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 லிருந்து 17,728ஆக அதிகரித்துள்ளது என்று இன்று வெளியான சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 11,640ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 25 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், சென்னையை ஒட்டிய மாவட்டங்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது, 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழப்பு 127 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தமாக 9342பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 8,256 பேர் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

covidmaya
covidmaya
covidmayb
covidmayb
ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img