
கார்ன் டொமேட்டோ
தேவையானவை:
வெள்ளை சோள முத்துக்கள் – அரை கப், சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – கால் கப்,
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கடுகு, வெள்ளை மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
தக்காளிச் சாறு – தண்ணீருக்கு பதில்.
செய்முறை:
வெள்ளை சோளத்தை நீரில் இரவே ஊறவைத்து, பிறகு நீரை வடித்துவிட்டு குக்கரில் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு வேகவிடவும். ஆறியதும் ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, தக்காளி சாறு விட்டு உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, வெந்த சோளம், தேங்காய்த் துருவல் போட்டு புரட்டி குறைந்த தணலில் வேகவிட்டு எடுக்கவும்.