
டார்டில்லா ரோல்
தேவையானவை:
மைதா, சோள மாவு – தலா அரை கப், உருளைக்கிழங்கு, குடமிளகாய் – தலா 1 (பொடியாக நறுக்கவும்),
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – கால் கப்,
துருவிய முட்டைகோஸ், கேரட் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
மைதா, சோள மாவை சலித்து உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்தியாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு வைத்துக் கொள்ளவும், டார்டில்லா ரெடி. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தாள், கேரட், முட்டைகோஸ் துருவல் ஆகியவற்றை வதக்கி… உப்பு, மிளகாய்த்தூள், குடமிளகாய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, மசாலா தயாரிக்கவும். தக்காளி சாஸை மைதா சப்பாத்தியில் தடவவும். அதன் உள் இந்த மசாலாவை வைத்து ரோல் செய்து பரிமாறவும்