தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு என்று பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், துப்பாக்கி சூடு என்ற வார்த்தை ஏன் முதல்வர் அறிக்கையில் இடம்பெறவில்லை ? என்று பேரவையில் கேள்வி எழுப்பியதோடு, சீருடையில் இல்லாத போலீசாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், போராட்டக்காரர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவிக்க முதலமைச்சருக்கு 5 நாள் தேவைப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என முதலமைச்சர் கூறியுள்ளார் என்றும், துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சமூக விரோதிகள் ஊடுருவல் என முதலமைச்சர் கூறுவது மக்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



