ஆளாளுக்கு அடிச்சு பரத்தும் ஆலு டோஃபி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
aalu tobhi

உருளைக்கிழங்கு டோஃபி

தேவையான பொருட்கள்

மாவிற்கு…

மைதா – அரை கப்,
ஓமம் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
தண்ணீர் – தேவைக்கு.

பூரணத்திற்கு…

உருளைக்கிழங்கு – 1,
வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு – சிறிது,
மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – தலா 1/4 டீஸ்பூன்,
கடலை மாவு – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – 1/2 டீஸ்பூன்,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3 பாகங்களாக கீறி விடவும். பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.