அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள கருணாநிதியின் சிலை மாதிரியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக நேரில் சென்று பார்வையிட்டார்.
மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் தீனதயாளன் என்ற சிற்பி கருணாநிதியின் 8 அடி உயரம் கொண்ட வெண்கலச் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சிலை விரைவில் அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ளது. கடந்த மாதம் கருணாநிதி சிலையின் மாதிரி வடிவத்தை நேரில் சென்று பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் சிறு மாற்றங்களை செய்ய அறிவுறுத்தினார்.
இந்நிலையில் புதுப்பேட்டிற்கு நேரில் சென்ற ஸ்டாலின், கருணாநிதியின் சிலை மாதிரியை 2வது முறையாக பார்வையிட்டு ஆலோசனைகளைக் கூறினார்.




