தோலம்பாளையத்தில் இறையருள் அறக்கட்டளை தொடக்கம்!

கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
iraiyarul-trust1
iraiyarul-trust1

கோவை மாவட்டம் – காரமடை அருகேயுள்ள தோலம்பாளையம் கிராமத்தில் சித்தர்கள் அருளை போற்றும் வகையில், திருமூலரின் திருமந்திரத்தை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், சைவ சமய புகழ்பாடும் , தஞ்சாவூர் மாவட்டத்தில்  தலைமையிடம் கொண்டு செயல்பட்டு வரும் இறையருள் அறக்கட்டளையின் கிளை  தோலம்பாளையத்தில் திறக்கப்பட்டது.

iraiyarul-trust4
iraiyarul-trust4

திருமந்திர திலகம் மருத்துவர் பொன். மாணிக்கவல்லி அவர்கள் பெயர்ப் பலகையை திறந்து வைத்து  தூய்மைப்  பணியாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

iraiyarul-trust2
iraiyarul-trust2

திருமந்திர யோகா, கோ பூசை, திருமந்திர வகுப்புகள் இனி மாத மாதம் தோலம்பாளையத்தில்  நடைபெறும் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கபட்டது.

iraiyarul-trust3
iraiyarul-trust3

இந்நிகழ்வில் தோலம்பாளையம்  ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் இறையருள் அறக்கட்டளையைச் சார்ந்த  பிரகாஷ், சண்முகம், உதயகுமார், வேல்மணி, தேவதாஸ்,’மரம்’ சந்திரன் உட்பட  பொது மக்கள் பலர் சமூக இடைவெளியுடன்  கலந்து கொண்டனர். மாலையில் அமைப்பின் சார்பில் கோ பூஜை நடைபெற்றது.

  • தகவல்: சரண்
ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.