தமிழகத்தில் 1562 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1149 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
coronavirus
coronavirus

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1149 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 1562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது! தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 33,229 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 528 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதை அடுத்து, இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 17,527 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆக அதிகரித்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 பேருக்கும், குவைத், கத்தாரில் இருந்து தமிழகம் திரும்பிய 12 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 134 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 57 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 பேருகுக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

covid juna
covid juna
covid junb
covid junb
covid junc
covid junc

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.