தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டுமான பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டப பணிகள் 5 மாதத்திற்குள் நிறைவடைந்து, இந்தாண்டு இறுதிக்குள் நினைவு மண்டபம் திறந்து வைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டாம்.
பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எங்கெல்லாம் குடிநீர் பிரச்னைகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. மக்களுக்கு தேவையான அளவு குடிநீரை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நிலத்தடி நீரை கொண்டுதான் மக்களின் குடிநீர் தேவையை அரசு பூர்த்தி செய்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். அக்டோபர், நவம்பர் வரை தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது’ என்றார்.
மேலும், திமுக எம்பிக்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர். எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது. அதிமுகவினர் உள்ளத்தில் தமிழ் உள்ளது என்றார்.




