சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டம் குறித்து ஏற்பாடுகள் செய்து வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்
சென்னை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் எஸ் பி வேலுமணி. அப்போது அவர் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்
மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் விவசாயக் கிணறுகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு சென்னைக்கு வழங்கப்படுவதாக கூறினார்
மேலும் குடிநீர் வடிகால் இதன் மூலம் அமைக்கப்பட்ட 13 ராட்சத குழாய்கள் மூலம் நீர் கொண்டு வரப்படுகிறது என்றும் அதன் மூலம் 15 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுவதாக அமைச்சர் கூறினார்
சென்னைக்கு இது போன்று தண்ணீர் பற்றாக்குறை நிலை அடிக்கடி ஏற்படும் தற்போது இந்த சூழல் ஏற்பட்டிருக்கிறது இதைவிடவும் தண்ணீர் கீழே சென்றால் தான் அதிக அளவில் நெருக்கடியான நிலை ஏற்படும் அதற்கு மாற்று வழியை நாம் ஏற்பாடு செய்து வருகிறோம்
ரயில் மூலம் தண்ணீரை கொண்டு வருவதற்கு முதலமைச்சரிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி!
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன் பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர்




