காமெடி நடிகர் அஸ்வினுக்கு திருமணம்! நான்கு வருட காதலி 24 ஆம் தேதி மனைவியாகிறார்!

சினி நியூஸ் சினிமா

தனது பெயரை ‘கும்கி’ அஸ்வின் என மாற்றிக் கொண்டார்.

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த, பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் அஸ்வின். காமெடி படமான இதில் மொட்டை ராஜேந்திரன் மகனாக நடித்திருந்தார்.

இதையடுத்து, எத்தன், வந்தான் வென்றான், முப்பொழுதும் உன் கற்பனைகள் உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் தம்பி ராமையாவுடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.

9e33e71acf996904d6e73185a2a517b0 - 2026

இந்த படம் ஹிட்டானதை அடுத்தும் இதில் அவர் கேரக்டர் பேசப்பட்டதாலும் தனது பெயரை ‘கும்கி’ அஸ்வின் என மாற்றிக் கொண்டார். தொடர்ந்து , நெடுஞ்சாலை, சண்டிவீரன், ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த நான்கு வருடங்களாக வித்யாஶ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது.

வித்யாஶ்ரீ , சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மகள். அமெரிக்காவில் படித்து முடித்துள்ளார். இவர்கள் திருமணம் வரும் 24 ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடக்க இருக்கிறது. கொரோனா லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த திருமணத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.