இசையமைப்பாளராகிறார் சித்ஸ்ரீராம்!

சினி நியூஸ் சினிமா

sithsriram 1 - 2026ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்தார் மணிரத்னம்.அதற்கு முந்தைய படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வந்தார்.

தான் இயக்கும் அனைத்து படங்களுக்கும்  ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைப்பாளராக வைத்திருக்கிறார் மணிரத்னம்.

ஆனால் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மற்ற டைரக்டர்கள் இயக்கத்தில் தான் தயாரிக்கும் படங்களுக்கு வேறு இசையமைப்பாளர்களை பயன்படுத்தி வருகிறார் மணிரத்னம்.

பிரபல பின்னணி பாடகர் சித்ஸ்ரீராமை இசையமைப்பாளராக தனது உதவியாளர் தனசேகரன் இயக்கி வரும், “வானம் கொட்டட்டும்” என்ற படத்திற்கு நியமித்துள்ளார்.

“என்னோடு நீ இருந்தால்…(ஐ), எனை மாற்றும் காதலே…(நானும் ரவுடி தான்), குறும்பா குறும்பா…(டிக் டிக் டிக்), கண்ணான கண்ணே…(விஸ்வாசம்) போன்ற பல பிரபலப் பாடல்களை பாடியவர் இவர்.

இவர் ஏ.ஆர்.ரகுமான், அனிருத் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியவர். விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேர்ந்து நடிக்கும் இந்த படத்திற்கு மணிரத்னம் கதை-வசனம் எழுதியிருக்கிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.