சென்னை:
பாகுபலிதான் பெரும் வசூல் சாதனை படைத்தது என்று முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளது அஜீத்தின் விவேகம்.
சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் நடிப்பில் உருவான விவேகம் உலகம் முழுவதும் உள்ள 42 நாடுகளில் 3200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 770 திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது. விவேகம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. ஆனால், அஜித் என்ற தனி நபர் அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கிவிட்டார்.
விவேகம், முதல் வார இறுதியில் ரூ.100 கோடி வசூல் திரட்டி, பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளதாம். திங்கள் மற்றும் செவ்வாய் சேர்ந்தால் ரூ.140 கோடிக்கு வசூல் ஆகியிருக்கும் என்று கூறப்படுகிறது .



