பாலியல் தொல்லை: வாழ்வின் நிகழ்வைப் பகிர்ந்த பிரபல நடிகை!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
somi ali - 2026

பாலிவுட் நடிகை சோமி அலி. இவர் 1990-களில் இந்தியில் அதிக படங்களில் நடித்தார்.

பாலிவுட் நடிகர் சல்மான்கானும், சோமி அலியும் பல வருடங்களாக காதலித்தனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

இந்த நிலையில் சோமி அலி அளித்த பேட்டியில், ‘நான் 6 மற்றும் 9 வயதில் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன். 14 வயதாகும்போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.

பாலியல் தொல்லை குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதே என்றனர். அது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

அந்த மன வலியோடு பல ஆண்டுகள் வாழ்ந்தேன். பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்த பெண்கள் தயங்கக்கூடாது” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.