மகன் தந்தைக்காற்றும் உதவி…!

சுய முன்னேற்றம் துணுக்குகள்
potato
potato

உருளைக்கிழங்கு தோட்டம்- கிராமத்தில் தனியாக வசித்து வந்தார் வயதான தந்தை. அவருடைய ஒரே மகன் சிறையில் இருந்தான். தன்னுடைய தோட்டத்தைக் கொத்தி உருளைக் கிழங்கு விதைக்க விரும்பினார் தந்தை. ஆனால் அந்த கடினமான உழைப்புக்கு அவருடைய வயது ஒத்துழைக்க வில்லை.

சிறையிலிருக்கும் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினர்:

“என் அன்பு மகனே! நீ என் உடன் இல்லாதது எனக்கு மிகுந்த குறையாக இருக்கிறது. இந்த ஆண்டு நான் உருளைக்கிழங்கு சாகுபடி செய்ய இயலாது போல் தோன்றுகிறது. அதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனென்றால் உன் அம்மா சரியான நேரத்தில் தோட்டத்தில் விதை விதைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவாள். என்ன செய்வது…? நீ இருந்திருந்தால் தோட்டத்தை கொத்தி விதைப்பதில் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பாய். என் கஷ்டமெல்லாம் நீங்கியிருக்கும்.

  • உன் அன்புத் தந்தை.

சில நாட்கள் கழித்து அந்த கிழவருக்கு ஒரு தந்தி வந்தது.
“தயவு செய்து தோட்டத்தை உழுது விடாதீர்கள், அப்பா. அங்கு தான் நான் துப்பாக்கிகளை புதைத்து வைத்துள்ளேன்”

அன்று இரவு பொழுது விடிவதற்குள் யூனிபாரம் அணிந்த போலீஸ் அதிகாரிகள் பலர் திடீரென்று வந்து இருட்டோடு இருட்டாக கிழவரின் தோட்டம் முழுவதும் கொத்தி விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களுக்கு எந்த துப்பாக்கியும் கிடைக்கவில்லை.

பாவம்… கிழவருக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்தவற்றை விளக்கி மகனுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.

மகனிடமிருந்து பதில் வந்தது….
“அப்பா! தோட்டம் தான் நன்றாக கொத்தப் பட்டு விட்டதே. உருளைக்கிழங்கை விதைத்து விடுங்கள். இங்கிருந்தபடியே நான் செய்ய முடிந்தது இவ்வளவு தான்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.