October 26, 2021, 2:10 am
More

  ARTICLE - SECTIONS

  இயற்கையில் இறைவனைக் காணலாம்! ஆச்சார்யாளின் அருளுரை!

  abinav vidhya theerthar

  ஆனந்தமான இயற்கைக்காட்சிகள் மரங்கள் பூக்கள் வயல்கள் ஆகியவற்றை மட்டுமின்றி மிருகங்கள் பறவைகள் மீன்கள் பூச்சிகள் போன்ற ஜந்துக்களையும் ஆசாரியாள் பெரிதும் ரசித்தார்.

  16 வயது கூட நிறைவடையாத இளைஞனாக ஆசாரியாள் இருக்கையில் ஒரு நாள் மாலையில் உலா வரும்போது அவர் ஒரு குளவியைப் பார்த்தார் அது அசைவற்ற ஒரு வெட்டுக்கிளியை தான் செய்து வைத்திருந்த ஒரு துவாரத்தின் வாயிலுக்கு கொண்டு வந்தது

  ஆச்சரியாள் தன் ஒரு பார்வையிலே, அவருக்கு இருந்த பூச்சிகளைப் பற்றிய ஞானத்தால் வெட்டுக்கிளி சாகவில்லை என்பதை அறிந்து கொண்டார். குளவி கொட்டியதால் அது மயங்கிப் போயிருந்தது.

  குளவி துவாரத்தின் உள்ளே சென்று திரும்பி வாயிலுக்கு வந்து வெட்டுக்கிளியை உள்ளே இழுத்துச் சென்றது பிறகு மண்ணை கொண்டு துவாரத்தின் வாயிலை மூடி விட்டு பறந்து விட்டது.

  முட்டையிலிருந்து வெளிவரும் முதன்நிலை புழுக்களுக்கு ஆகாரமாக அது ஒரு வெட்டுக்கிளியை பயன்படுத்தும் என்று ஆச்சாரியாள் கேள்விப்பட்டிருந்தார். அந்த குளவிகளின் வளர்ச்சிகளை பார்க்க வேண்டும் என ஆச்சாரியாள் விருப்பப்பட்டார்.

  abinav

  ஆனால் துவாரத்தின் வாயை கொஞ்சமாக திறந்து பார்ப்பதற்கும் அவர் மனம் இடம் தரவில்லை. இதனை மற்றொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம் எனவிடுவதற்கும் அவருக்கு மனம் இல்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து அவருக்கு சாதகமாக சூழ்நிலை உருவானது.

  அடுத்த முறை அவ்விடத்திற்கு வரும்பொழுது அவருக்கு தெரியாமல் எப்படியோ ஒரு துவாரத்தை மூடி இருந்த மண் சுவர் சற்று விலகி ஓட்டை அங்கு உருவாகி இருந்தது. தனது முகத்தை ஓட்டைக்கு அருகில் கொண்டு சென்று உள்ளே நடப்பதை எட்டி பார்த்தார்.

  குளவியிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்த அதனுடைய முதல்நிலை புழுக்களை அவர் கண்டார் புழுக்களை விரிவாக ஆராய வேண்டும் என அவருக்கு தோன்றியது அதற்கு வேண்டிய பூதக்கண்ணாடி அவரிடம் இல்லை ஆராய்ச்சியை மற்றொரு நாளைக்கு தள்ளிப்போடுவும் அவர் விரும்பவில்லை சமயோசிதமான புத்தியுடைய அவர் ஒரு காய்ந்த இலை எடுத்து அதில் ஒரு சிறிய ஓட்டையை ஏற்படுத்தினார்.

  அங்கிருந்த மழைநீரின் ஒரு துளியை எடுத்து தாம் செய்த இந்த ஓட்டையின் மீது வைத்தார். துளியை ஒரு பூதக் கண்ணாடியாக அவர் உபயோகித்து இலையை பக்குவமாக பிடித்துக்கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

  மற்றொரு சமயம் இரண்டு அடுத்தடுத்த மரங்களின் தாழ்வான இருக்கைகளுக்கு இடையில் இருந்த ஒரு சிறு இடைவெளியில் தன் கையை வைத்துக்கொண்டு ஒரு குரங்கு மிகவும் வருத்தத்துடன் இருப்பதுபோல் உட்கார்ந்திருந்தது. அதைப்பார்த்து ஆச்சாரியாள் அதற்கான காரணம் தெரிந்து கொள்வதற்காகவும் அதன் கையில் என்ன இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவும் தலையைத் அருகில் கொண்டு சென்றார்.

  யாரோ தூக்கி போட்ட ஆப்பிள் பழம் அதன் கையில் இருந்ததை அவர் கவனித்தார் பழத்தை இழப்பதற்கும் மனமில்லாமல் கழுத்தோடு கையை வெளியே எடுக்க முடியாமல் அது கஷ்டப்படுவது அவருக்குப் புரிந்தது.

  abinav vidhya theerthar

  குரங்குகள் மிகவும் புத்திசாலி ஆனால் இந்த பழத்தை விட்டுவிட்டு கையை மரத்தில் இருந்து விடுவித்துக்கொண்டு அப்பழத்தை கீழே பிடித்துக் கொள்ளலாம் என்று தோன்றவில்லையே என்று எண்ணி வியந்தார்.

  இரக்கம் பிறந்தது அது உண்டாக்கிக் கொண்ட கஷ்டத்திலிருந்து அதை விடுவிப்பதற்காக ஒரு வாழைப்பழத்தை உரித்து அதன் வாய் அருகே கொண்டு சென்றார் அது தலையை முன்னே சாய்த்து பழத்தைக் கடித்து சாப்பிட ஆரம்பித்தது.

  ஆனால் கையில் இருந்த ஆப்பிள் பழத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது ஆச்சாரியாள் இரண்டாவது பழத்தை எடுத்தார் இந்த தடவை அருகே கொண்டு செல்லாமல் சிறிது தூரத்தில் அதை வைத்துக் கொண்டார் அது தனக்கு வேண்டிய பழத்தை கை நீட்டி வாங்கிக் கொள்வதற்காக ஆப்பிளை விடுவித்துவிட்டு வாழைப்பழத்தை பெற்றுக்கொண்டது

  abinav vidhya theerthar

  பழத்தைச் சாப்பிட்டு கொண்டிருக்கும் தருணத்தில் ஆச்சாரியார் கீழே விழுந்த ஆப்பிள் பழத்தை எடுத்து மீண்டும் அதனிடம் கொடுத்தார். இயற்கையை பற்றி கூறும் போது இறைவனின் படைப்பு மிகவும் வசீகரமானது. இயற்கை நமக்கு கடவுளை ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் இயற்கையானது எல்லோர் முன்பும் காணப்படும் இறைவனின் வடிவமே ஆகும். ஒருவன் வானத்தைப் பார்க்கும் பொழுது அல்லது கடலை பார்க்கும் பொழுது மனதில் அமைதி நிலையை உணரலாம்.

  பரந்து விரிந்துள்ள இப்பிரபஞ்சத்தில் தான் நாம் எவ்வளவு அற்பமானவர்கள் என்கிற ஒரு உணர்வை ஒருவனுக்கு ஏற்படுத்தும். அக்காட்சிகள் அவனுக்கு ஏற்படும் நதிகளில் தோன்றும் அலைகளின் மீது கதிரவனின் ஒளிக்கதிர்கள் புரியும் வர்ணஜாலம் விசித்திரமாக இருக்கிறது. மனிதனோ இயற்கையை இயற்கையின் அழகை ரசிப்பதை விடுத்து வீணான பொழுதுபோக்குகளில் நேரத்தி வீணடிக்கிறான். மனதிற்கு வன்மத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தும் டிவி சினிமா சூதாட்டம் போன்ற கேளிக்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இந்த இயற்கை அழகிலிருந்து விலகி இருக்கிறான் என வருத்தப்பட்டார்.

  இந்த சம்பவங்களின் மூலம் தான் என்ற அகங்காரம் ஒருவருக்கு வரக்கூடாது என்பதையும் பிற உயிர்களிடத்தில் அன்பும் அக்கறையும் காட்ட வேண்டும் என்பதும் எதையும் உற்று நோக்கி அதன் உண்மை நிலையை ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும் என்றும் உணர்த்தினார்கள். ஸ்ரீகுருப்யோ நம:

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-