உணவு தேடி வந்த புள்ளிமான்: மீட்ட வனத்துறையினர்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai deer
madurai deer

மதுரை: உணவு தேடி வந்த புள்ளிமான் முள் வேலியில் சிக்கியது . இதனை மீட்ட வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டி என்கின்ற கிராமத்தில் சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது .
முள்வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கியது.

இதைப் பார்த்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கொடுக்கவே ஊராட்சி மன்ற தலைவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்து பத்திரமாக எவ்வித காயமும் இன்றி வனத்துறையினர் புள்ளி மானை மீட்டனர்.

பின்னர் அந்த மானுக்கு உணவளித்து பத்திரமாக கொட்டாம்பட்டி அருகே உள்ள வளர்ச்சிபட்டி மலைப்பகுதியில் வனவர் கம்மக்குடியான் தலைமையில் பத்திரமாகக் கொண்டு விட்டனர்!

நேற்று முன்தினம் இதே போன்ற உணவு தேடி வந்த இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று இரை தேடி வரும் பொழுது கிணற்றுக்குள் விழுந்தது. இதை தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் பத்திரமாக மீட்டு பெருமாள் மலைப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.

madurai deer
madurai deer

உணவு தேடி வந்த மான் கிணற்றில் விழுந்தது மீட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர். மதுரையை அடுத்த மேலூர் அருகே வெள்ள மலையில் இருந்து கீழையூர் பகுதிக்கு இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மான் ஒன்று வந்தது எதிர்பாராத விதமாக அங்குள்ள தனியார் கிணற்றுக்குள் விழுந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் மேலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து பின் சம்பவ இடத்திற்கு விரைந்த மேலும் தீயணைப்பு துறையினர் மாலை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் வனவர் கம்க்குடியான் மூலம் பெருமாள் மலை பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.