சிரஞ்சீவிக்கு முடி வெட்டி விடும் சுஷ்மிதா!

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
chiranjeevi sushmitha
chiranjeevi sushmitha

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அவருடைய மகள் சுஷ்மிதா கொணிதெல ஹேர் கட் செய்துள்ளார். லாக்டௌனில் இவ்வாறு தன் தந்தைக்கு தலை முடி வெட்டிவிடுவதாக தெரிவித்தார்.

ஃபாதர்ஸ் டே தொடர்பாக அவர் இந்த ஸ்பெஷல் வீடியோவை சோசியல் மீடியாவில் ஷேர் செய்தார். ‘லாக்டௌன் ஆக்டிவிடீஸ்’… வீட்டிலிருந்து வெளியில் செல்லமுடியாத போது என்ன செய்வது? என்று வீடியோவில் சுஷ்மிதா கூறியுள்ளார்.

இதற்கு சிரஞ்சீவி பதிலளிக்கையில் ஆமாம் எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்கிறோம் என்று புன்னகையோடு கூறியுள்ளார்.

உன் அன்புக்கு நன்றி அப்பா! சிம்பிள் ஹேர் கட்டிங்கிலிருந்து வாழ்க்கையில் பெரிய விஷயங்கள் வரை அனைத்திலும் என்னை நம்பி உன் தலையைக் கொடுத்துள்ளாய். அது என்னிடம் தன்னம்பிக்கையை நிரப்பி உள்ளது. தந்தையின் சிறப்பு குணம் அதுதான் போலும்! லவ் யூ! ஹேப்பி ஃபாதர்ஸ் டே என்று சுஷ்மிதா வீடியோவில் கேப்ஷன் இட்டுள்ளார்.

தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ள அன்பைக் காட்டும் இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி ரசிகர்களின் அபிமானத்தை ஈர்த்துள்ளது. ஆயிரம் பேர் பார்வையாளர் களோடு கூட நடிகை மஞ்சு லக்ஷ்மி லவ் சிம்பல் ஷேர் செய்துள்ளார். நிஹாரிகா சோ க்யூட் என்று காமெண்ட் செய்துள்ளார்.

இவற்றோடு கூட சுஷ்மிதா சிறுவயதில் தந்தையோடு சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை கூட ஷேர் செய்துள்ளார். இதில் முடி வெட்டும் வீடியோ.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.