ஹைதரபாத்தில் மீண்டும் ஒரு கொடூரம்! குளத்தில் பெண் சடலம்! டாட்டூதான் ஆதாரம்!

Published:

body identified with tattoo
body identified with tattoo
  • நகரத்தின் நடுவில் குளத்தில் ஒரு பெண்ணின் சடலம்.
  • டாட்டூ ஆதாரமாகக் கொண்டு கண்டுபிடிக்க முயற்சி.

குளத்தில் மிதந்த பெண்ணின் உடலை போலீஸார் வெளியில் எடுத்தார்கள். வலது கையிலுள்ள எஸ் என்ற டாட்டூவை தவிர எப்படிப்பட்ட ஆதாரமும் கிடைக்காததால் இந்த சம்பவம் மிஸ்டரி ஆக மாறியது.

ஹைதராபாத் நகரில் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெண்ணை கொடூரமாக கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி குளத்தில் வீசி எறிந்த கோர நிகழ்வு தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது.

போரபண்டா அருகில் உள்ள சுன்னம் செருவு என்ற குளத்தில் பிளாஸ்டிக் கவரில் சுற்றிய உடல் மிதந்து வந்ததாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். உடலை குளத்திலிருந்து வெளியில் எடுத்தார்கள். மெல்லிய கயிற்றால் கையையும் காலையும் கட்டி உள்ள பெண்ணின் உடல் மிகவும் நீரில் ஊறிப் போய் இருந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறந்த உடலை குளத்தில் வீசி எறிந்து நிறைய நாட்கள் ஆகியிருக்கும் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இறந்த உடலை பரிசோதித்து பார்த்தனர். பெண்ணின் உடலில் தலை மீது பலத்த காயங்கள் இருப்பதாக தெரிந்தது. பெண்ணை கொலை செய்து குளத்தில் வீசி எறிந்து உள்ளதாக சந்தேகம் வந்துள்ளது.

பெண்ணின் வயது முப்பதிலிருந்து நாற்பது நடுவில் இருக்கும் என்றும் அவருடைய வலது கையில் எஸ் என்ற எழுத்து டாட்டூ செய்யப்பட்டுள்ளது என்றும் இறந்த உடல் முழுவதும் வீணாகிவிட்டதால் பெண்ணை அடையாளம் கண்டுபிடிக்க டாட்டூ ஒன்று மட்டுமே ஆதாரமாக உள்ளது என்றும் டாட்டூ வைத்துக்கொண்ட பெண்ணை யாருக்காவது தெரிந்தால் தம்மை அணுக வேண்டும் என்றும் சனத்நகர் போலீசார் அறிவித்துள்ளனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கொலை வழக்கு பதிவு செய்துகொண்டு போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img