தடை பல கடந்து… புரி ஸ்ரீஜகந்நாதர் ரத யாத்திரை!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன்
puri jagannadh rath yatra
puri jagannadh rath yatra

நாளை ஜூன் 23 செவ்வாயன்று ஶ்ரீஜகன்னாதர் ரத யாத்திரை.

ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றாகவும் சார்தாமில் முக்கியமானதாகவும் வர்ணிக்கப்படும் புருஷோத்தம க்ஷேத்திரம் பூரியில் ஆஷாட மாதம் சுக்ல பக்ஷ த்விதியை அன்று சுபத்திரா பலராமர் சுதர்சன சக்கரத்தோடு கூட ஜகன்னாதர் ரத யாத்திரை மிகவும் வைபவமாக நடக்கும். கந்த புராணத்தில் இதன் மகிமை விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த யாத்திரைக்கு உற்சவ மூர்த்திகள் அல்லாமல் பிரதானமான ‘தாரு மூர்த்திகள்’ எனப்படும் மரத்தாலான மூல விராட்களே வெளியே எழுந்தருளி வருவது பிரத்தியேக சிறப்பு.

இந்த யாத்திரை பூரியில் மட்டுமின்றி பல நகரங்களிலும் நடக்கிறது. இந்த யாத்திரையில் பங்குபெறுவது புண்ணியம் அளிக்கக்கூடியது.

மரத்தாலான மூர்த்திகளாக பூரியில் கொலுவீற்றிருக்கும் போதும் ஜெகன்நாதர் ஆனதால் நாம் வசிக்கும் இடங்களிலும் ஜெகநாதனின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டி விஷ்ணு பூஜை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் போன்றவை செய்து ஜெகநாதனின் அனுக்கிரகத்தைப் பெற முடியும்.

‘ ரத ஸ்தம் வாமனம் த்ருஷ்வா புனர் ஜன்ம ந வித்யதே’
ரதத்தில் வீற்றிருக்கும் ஜெகந்நாதனை தரிசித்தால் புணர்ஜென்மம் அற்ற மோட்சத்தைப் பெறலாம் என்பது சாஸ்திர வாக்கியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.