பரங்கி பூசணி புளிப் பச்சடி!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
paranki pusani kari

பரங்கி பூசணி புளிப் பச்சடி

தேவையானவை:
பரங்கி – ஒரு கீற்று,
பூசணி – ஒரு கீற்று,
புளி (கரைத்துக் கொள்ளவும்), – நெல்லிக்காய் அளவு
வெல்லம் – சிறிதளவு,
தேங்காய் துருவல் – கால் கப்.
பச்சை மிளகாய் – 4 (நறுக்கவும்),
தேங்காய் எண்ணெய்,
கடுகு,கறிவேப்பிலை – தாளிக்க – தேவையான அளவு,
மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
பரங்கி, பூசணியை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பிறகு புளிக்கரைசல் விட்டு கொதிக்கவிடவும். இதில் உப்பு, வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.