தமிழகத்தில் பாஜக., தோல்வி அடைந்தது தமிழகத்துக்குத்தான் இழப்பு: எஸ்.வி.சேகர்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

svesekhar - 2026

தமிழகத்தில் பா.ஜ.க தோல்வி அடைந்தது, தமிழகட்துக்குத்தான் பெரும் இழப்பு என நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனாரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் , செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடியின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளவிடாமல் தமிழகத்தில் மற்ற கட்சிகள் செய்த மோசமான பிரசாரத்தால்தான் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

சி.ப.ஆதித்தனாரின் 38-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 30-ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சி தான் மாறி மாறி நடந்து வருகிறது. அதன் காரணமாகவே தமிழக மக்கள் இந்த தேர்தலில் திமுக-விற்கு வாக்களித்துள்ளனர்! திமுக-வின் வெற்றி என்பது மிகப் பெரிய வெற்றி கிடையாது. அது மிகப்பெரிய கட்சியும் கிடையாது!

மாநிலத்தில் நிலையான ஆட்சியும், மத்தியில் வரலாற்று சிறப்பு மிக்க மோடியின் ஆட்சியும் அமைந்துள்ளது! வேலூர் மக்கள் திமுக மீது கோபமாக உள்ளனர்! எப்போது தேர்தல் வந்தாலும் அந்த தொகுதியில் அதிமுகதான் வெற்றி பெறும்.. என்றார்.

1 thought on “தமிழகத்தில் பாஜக., தோல்வி அடைந்தது தமிழகத்துக்குத்தான் இழப்பு: எஸ்.வி.சேகர்!”

  1. 37 families are benefitted .Billions owners will become multi billion owners . This time BJP will not extent TN as no one earth will help those who hate them. No one will feed milk to the biting snake. TN is fools paradise.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.