கொரோனா: அதுவா வந்தது அதுவாவே போயிடும்: மருத்துவ நிபுணர்!

உலகம் பொது தகவல்கள்
corono

கொரோனா வைரஸ் வலுவிழந்துவிட்டதாகவும், அது மருந்து தேவையில்லாமல் தானாகவே காணாமல் போய்விடும் என இத்தாலிய மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் காரணமாக ஆற்றல் குறைந்து மாறியிருப்பதாகவும், அது தீவிரமான நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு சென்றுள்ளதாக இத்தாலிய மருத்துவ நிபுணர் மேட்டியோ பாஸெட்டி கூறியுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பே கொரோனா வைரஸ் காணாமல் போய்விடும் என்றும், தற்போது இத்தாலியில் குறைவான மக்களே நோய் பாதிப்புக்கு ஆளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் இத்தாலிய மருத்துவ நிபுணர் மேட்டியோ பாஸெட்டி கருத்தை இங்கிலாந்தின் எக்ஸிடெர் மருத்துவ பல்கலைக்கழக பேராசியர் மருத்துவர் பாரத் பங்கானியா மறுத்துள்ளார். நம்மிடம் தடுப்பூசி இருந்தால் மட்டுமே கொரோனாவை தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.