பாலிவுட் சூப்பர் ஸ்டாரை மாற்றி சூப்பர் ஸ்டார் என ட்விட் செய்த கிரில்ஸ்!

இந்தியா சினிமா பொது தகவல்கள்
rajini pear grills - 2026

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘மேன் Vs வைல்ட்’. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுபவர் பியர் கிரில்ஸ். காடு, வன உயிரினங்களின் தன்மையை விளக்கும் பியர் கிரில்ஸ், காட்டுக்குள் சிக்கினால் உயிர் பிழைப்பது எப்படி என்பது குறித்து நிகழ்ச்சி மூலம் விளக்கம் அளிப்பார்.

இவருடன் இந்திய பிரதமர் மோடி காட்டுக்குள் பயணம் செய்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒரு கோடிக்கும் அதிகமானோர் தொலைக்காட்சியில் பார்த்தனர். இது சாதனை என அந்த தொலைக்காட்சி அறிவித்தது. இந்நிலையில் பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி கலந்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் நேற்று வெளியாகின.

rajini 3 - 2026

இந்நிலையில் இது குறித்து பியர் கிரில்ஸ் முதலில் ஒரு ட்வீட் செய்தார். அதில், “பிரதமர் மோடி உடனான நிகழ்ச்சி, தொலைக்காட்சி வரலாற்றில் சாதனை படைத்தது. அதன் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினி என்னுடைய Into The Wild With BearGrylls என்ற புதிய நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினியுடன்தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்தார்.

rajini 1 2 - 2026

பியர் கிரில்ஸின் ட்வீட்டுக்கு பதில் அளித் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் ‘ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர் ஸ்டார் இல்லை’ என்றும் அவர் கோலிவுட் சூப்பர் ஸ்டார் என்றும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து தனது முதல் ட்வீட்டை டெலிட் செய்த பியர் கிரில்ஸ், மற்றொரு ட்வீட் செய்து அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.